தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள கிளியனூர் கிராமத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்.
தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள கிளியனூர் கிராமத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது .
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அவர்களால் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக உணவு பொருள் வழங்கல் துறை சார்பாக ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை கிராம அளவில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து தரங்கம்பாடி வட்டம் கிளியனூர் கிராமத்தில் இன்று குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், செல்போன் திருத்தம், புதிய மின்னணு குடும்ப அட்டை, அங்கீகார சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். மேற்படி முகாமில் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர் முஹம்மது ஹாலித், ஊராட்சி மன்ற துணை தலைவர் மணிகண்டன், தனி வருவாய் ஆய்வாளர் மரிய ஜோசப் ராஜ், வட்ட பொறியாளர் ஐயப்பன் மற்றும் அங்காடி விற்பனையாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது குடும்ப அட்டையில் உள்ள குறைபாடுகளை முகாமில் சரி செய்து சென்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.