தர்மபுரம் மடம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கடையம் தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தர்மபுரம் மடம் பஞ்சாயத்து சம்பன்குளத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஊராட்சி மன்ற தலைவர் ஜன்னத் சதாம் உசேன் தலைமையில் நடைபெற்றது.
பேரணியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தர்மபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜன்னத் சதாம் உசேன் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்
துணைத்தலைவர் அனுசியா சைலப்பன். வார்டு உறுப்பினர் .முகம்மது ஷரிப், முகம்மது மைதின் ஊராட்சி செயலர் குமரேசன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
