தர்மபுரியில் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்ற காளியம்மன் திருவிழா.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ ரங்கநாதர் காளியம்மன் கோவில் திருவிழா மிகவும் பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.
தர்மபுரி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா ஆண்டிற்கு ஒரு முறை மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத திருவிழா இந்த ஆண்டு நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் திருவிழா நடைபெற்றதால், ஏராளமான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா போன்று பிரம்மாண்டமாக நடைபெற்ற திருவிழாவில் வெளி மாவட்ட மற்றும் பள்ளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசித்து சென்றனர்.
3 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீச்சட்டி, முளைப்பாரி, காவடி எடுத்து அம்மனை தரிசித்தனர். மேலும் காவடி ஆட்டம், புலி ஆட்டம், சிலம்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் திருவிழாவில் காண்போரை பரவசம் அடையச் செய்தது.
திருவிழாவில் நிகழ்ச்சி ஏற்பாடளர்களை, கர்ணன், காளிமுத்து தேவர் சின்ராஜ் , தலைமையில் இதர கமிட்டி நிர்வாகிகள் இணைந்து செய்துள்ளனர். விழாவை காணவும், அம்மன் அருள் பெறவும் ஏராளமான பொதுமக்கள் வருகை அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.