BREAKING NEWS

தர்மபுரியில் மைனர் சிறுமிக்கு திருமணம்: பெற்றோர்களை கைது செய்யாமல் இருக்க ரூ. 50, ஆயிரம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் கைது!

தர்மபுரியில் மைனர் சிறுமிக்கு திருமணம்: பெற்றோர்களை கைது செய்யாமல் இருக்க ரூ. 50, ஆயிரம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் கைது!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் லஞ்சப் பணத்தில் சொத்து வாங்கி குவித்தது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை விரிவுபடுத்தி வரும் நிலையில், லஞ்சம் வாங்குவோரை கையும், களவுமாக கைது செய்தும் வருகின்றனர். இதில் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அடக்கம். பொதுவெளியிலேயே லஞ்சம் வாங்கி அசிங்கப்பட்டு சிக்கி கொள்ளும் பெண் அதிகாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி மார்ச், 26ல் காதல் திருமணம் செய்தார். தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார். மாவட்ட சமூகநலத்துறையினர், பாலக்கோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல் ஆய்வாளர் வீரம்மாள்(வயது 50), விசாரித்த போது, சிறுமியின் தாயிடம், குழந்தை திருமண சட்ட கைது நடவடிக்கையை தவிர்க்க, ரூபாய் 50, ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

அவர்கள், லஞ்சம் கொடுத்த மனம் இல்லாத இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) நாகராஜனிடம் புகார் அளித்துள்ளார்.

பின்னர் ரசாயன பொடி கலக்கப்பட்ட ரூபாய் நோட்டை புகார்தாரரான சிறுமியின் பெற்றோரிடம் கொடுத்து லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளரிடம் கொண்டு சென்று கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர்.

அதன்படி நேற்று பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியிலிருந்த காவல் ஆய்வாளர் வீரம்மாளிடம் ரசாயன பொடி கலக்கப்பட்ட லட்சப் பணத்தை கொடுக்க அதைப்பணத்தை பெற்றுக் கொண்ட போது மகளிர் காவல் நிலையத்தில் வைத்து லஞ்சம் வாங்கிய போது வீரம்மாளின் கைரேகை பதிந்த ரசாயன பொடி கலக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களுடன் கையும், களவுமாக கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) நாகராஜன் தலைமையிலான காவல் ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

காதல் திருமணத்தில் கர்ப்பமான மைனர் பெண்ணின் பெற்றோர் மீது வழக்குப் பதியாமல் இருப்பதற்காக 50 ஆயிரம் ரூபாய் லஞ்சக் கையூட்டுப் பெற்ற மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பெண் காவல் ஆய்வாளர் வீரம்மாள் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 16 வயது மகள், கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று காதல் திருமணம் செய்து கொண்டார். கர்ப்பிணியான சிறுமி, மருத்துவ சிகிச்சைக்கு சென்றபோது அவர் மைனர் என்பது தெரியவந்தது.

பின்னர் இது குறித்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க அதன் பிறகு அவர்கள், பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வீரம்மாளிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து விசாரணை செய்த காவல் ஆய்வாளர் வீரம்மாள், மைனர் பெண் பெற்றோரிடம் 18 வயது ஆவதற்கு முன் மகளை திருமணம் செய்து கொடுத்ததற்காக, (2012 போஸ்கோ) குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் உங்களை கைது செய்து சிறையில் அடைக்க உள்ளதாக மிரட்டினார்.

ஆனால் 50, ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வழக்கை கைவிட்டு விடுவதாகவும் கூறியுள்ளார். பணம் கொடுக்க விரும்பாத பெண்ணின் பெற்றோர், கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். போலீசார் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மைனர் பெண்ணின் பெற்றோரிடம் கொடுத்து லஞ்சம் கேட்ட பின் ஆய்வாளரிடம் கொண்டு சென்று கொடுத்தனர்.

கொஞ்சம் கூட யோசிக்காமல் அற்ப பணத்திற்கு ஆசைப்பட்டு காவல் ஆய்வாளர் வீரம்மாள், ரசாயன பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை வாங்கிய போது, அங்கு மாறு வேடத்தில் மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையிலான காவல் ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட போலீசார், வீரம்மாளை கையும், களவுமாக பிடித்தனர்.

லஞ்ச ஊழல் தடுப்பின் கீழ் வழக்கு பதிவு செய்து அரசு மருத்துவமனைக்கு வீரம்மாளை அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனைக்கு பின் மருத்துவர்களின் பரிசோதனைக்கான அறிக்கையைப் பெற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

தர்மபுரியில் பெண் காவல் ஆய்வாளர் லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்களை பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜனிடம் , நமது “பாரத இதழ்” நிருபர் குழு கேட்டுக் கொண்டதில், அவர் தெரிவிக்கையில்’ அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் சுலபமாக சேவைகளைப் பெற வேண்டும் என்பது அரசின் நோக்கமாகும்.

ஆனால், சில அரசு ஊழியர்கள் அவர்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, லஞ்சக் கையூட்டுப் பெரும் வழங்கும் நிலை இன்றும் தொடர்கிறது. இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவிக்காமல், பொதுமக்கள் தைரியமாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முன்வர வேண்டும் என தெரிவித்துக் கொண்டார்.

CATEGORIES
TAGS