BREAKING NEWS

தர்மபுரி ஒகேனக்கல் பகுதியில் வெள்ளப் பெருக்கால் குளிக்க தடை!!

தர்மபுரி ஒகேனக்கல் பகுதியில் வெள்ளப் பெருக்கால் குளிக்க தடை!!

File:Hogenakkal Falls Close.jpg - Wikimedia Commons

தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வினாடிக்கு 25000 கனஅடி நீர்  வந்து கொண்டிருக்கிறது. இங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஒகேனக்கலில் பரிசில்களை இயக்கவும், நீர்நிலைகளில் குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

hogenakkal falls: Hogenakkal காவிரி ஆற்றில் திடீர் வெள்ளம்... சுற்றுலா  பயணிகளுக்கு தடை! - dharmapuri collector announced tourister temporarily ban  in hogenakkal due to cauvery river flood | Samayam Tamil

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று 100 மி.மீ  மழை பெய்ததால் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்தது. ஒகேனக்கலில் நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாடு-கர்நாடக எல்லை  பிலிகுண்டுவில்  வினாடிக்கு 25000 கனஅடியாக தண்ணீரானது வந்த வண்ணம் உள்ளதுஒகேனக்கலில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி  பகுதிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், அங்கு குளிக்கவும், பரிசிலில் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் நீர்வரத்து அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள், மற்றும் காவல்துறையினர்  தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மே15ம் தேதி காலை 108.14 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 109.04 அடியாக அதிகரித்துள்ளது.  கடந்த 3 நாட்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 1.31 அடியாக அதிகரித்துள்ளது. மழையின் அளவை பொறுத்து மேலும் நீர்வரத்து அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் இந்த உத்தரவை கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் கண்காணிக்க காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )