BREAKING NEWS

தற்காப்புக்காக பிரதமர் மோடி பெயரை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துகிறார் – கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ. ராஜூ குற்றச்சாட்டு.

தற்காப்புக்காக பிரதமர் மோடி பெயரை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துகிறார் – கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ. ராஜூ  குற்றச்சாட்டு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் திருமண மஹாலில் வைத்து அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் வீட்டு வரி உயர்வு. மின் கட்டண உயர்வு‌‌.

 

சட்ட ஒழுங்கு சீர்கேடு. என தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியாத திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுகவிற்கு இடைக்கால பொதுச்செயலாளராக தலைமை ஏற்று வழிநடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசுக்கு எதிராக நடத்தும் முதல் போராட்டம் வரும் 25ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. என்பதால் திரளான அதிமுக நிர்வாகிகள் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு விடியாத ஆட்சிக்கு நாம் முடிவு கட்ட வேண்டும் என்றால் ஆர்ப்பாட்டத்தில் அண்ணா திமுக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் பேசினார்.

 

 

இக்கூட்டத்தில் நகரச் செயலாளர் விஜயபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், ஒன்றிய செயலாளர்கள் அய்யா துரை பாண்டியன், வண்டானம் கருப்பசாமி, அன்புராஜ், காந்தி என்ற காமாட்சி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார்,

 

மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், அம்மா பேரவை நகரச் பொருளாளர் வேலுமணி, வழக்கறிஞர் அணி மாவட்டச் செயலாளர் சிவபெருமாள், வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ்,கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன்,கருங்குளம் ஒன்றிய செயலாளர் லட்சுமண பெருமாள், எட்டையாபுரம் நகரச் செயலாளர் ராஜகுமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கோபி,முருகன், பழனி குமார், அழகர்சாமி, மனோகரன் கடம்பூர் மாயா துறை, உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில் :

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற வில்லை ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப் போறார் என்று கூறினார்கள். ஆனால் தமிழகம் இருளில் உள்ளது

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மட்டுமல்ல மின்வெட்டும் அதிகமாக உள்ளது. சம்சாரம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது. மின் கட்டண உயர்வினால் பொதுமக்கள் மற்றும் தொழிற்துறையினர் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது இருந்து எழுச்சி தற்போது உள்ளது எங்களை பற்றி சொன்னவர்கள் (சசிகலா) காணாமல் போய் உள்ளார்கள்.

அதிமுக எம்பியை நீக்க கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து கூறினால் எப்படி இருக்குமோ அப்படி தான் சசிகலா கருத்தும் பொதுக்குழு, நீதிமன்றம் மூலமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் அதிமுக என்று நிரூபமணமாகி உள்ளது. அதிமுக உள் விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று பாஜக தெளிவாக கூறிவிட்டது.

பிரதமர் மோடி கூறி தான் அதிமுகவில் இணைந்ததாக ஓ. பன்னீர்செல்வம் தான் கூறினார் தவிர பிரதமர் மோடி இதுவரை கூறவில்லை. தற்காப்புக்காக பிரதமர் மோடி பெயரை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்திக் கொள்கிறார். பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் தற்போது வரை அதிமுக உட்கட்சி பிரச்சனை குறித்து பேசியதில்லை. அதிமுக உட்கட்சி தலையிட மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ள பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். யார் உள்ளே சென்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )