தாமரை செந்தூர் பாண்டியின் “கதை இல்லாத கதை” நூல் வெளியீட்டு விழா. சபாநாயகர் அப்பாவு வெளியிட எர்ணாவூர் நாராயணன் பெற்றுக்கொண்டார்.

நெல்லை மாவட்டம் உவரியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் கலைமாமணி தாமரை செந்தூர் பாண்டி கதை இல்லாத கதை என்ற தன் வரலாற்று நூலை எழுதி உள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா திசையன்விளை வி.எஸ்.ஆர். கல்யாண மண்டபத்தில் நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக சபாநாயகர் அப்பாவு, தமிழக பனை வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவரையும் சென்னை ராணிமேரி கல்லூரி உதவி பேராசிரியை எஸ்.கல்பனா வரவேற்றார். சபாநாயகர் அப்பாவு நூலை வெளியிட எர்ணாவூர் நாராயணன் பெற்று க்கொண்டார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன், சாமித்தோப்பு பூஜித குருபாலபிரஜாபதி அடிகள், சென்னை விமான நிலையம் சுங்க துறை உதவி ஆணையர் அழகேசன்,உவரி ராஜன் கிருபாநிதி,முன்னாள் உவரி பஞ்சாயத்து தலைவர் வீ.ராஜன்,முன்னாள் லயன்ஸ் கவர்னர் சுயம்புராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினார் கள். பாராட்டி ற்கு நன்றி தெரிவித்து நூல் ஆசிரியர் தாமரை செந்தூர் பாண்டி பேசினார்.
விழாவில் மாநில இந்து முன்னணி செயலாளர் டாக்டர் அரசுராஜா,தொழிலதிபர் தங்கையா கணேசன்,ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பெல்சி, பேரூராட்சி கவுன்சிலர் கமலா நேரு,உவரி எஸ்.வி.அந்தோணி,நவ்வலடி சரவணகுமார், நெல்லை வழக்கறிஞர் ஜெயபாலன்,காங்கிரஸ் மாநில பேச்சாளர் மருதூர் மணிமாறன், ஆன்மீக பேச்சாளர் ஆர். ஜி.பாலன், தமிழ் நாடு மீனவர் பேரவை தலைவர் உவரி ஆல்ட்ரின், காமராஜர் நற்பணி இயக்க தலைவர் எஸ்.ஜி.ராஜன், டி.பி.சரவணன், சிவகுமார், தி.முக.பிரமுகர்கள் ஜெயராஜ்,நடராஜன், நெல்சன், உட்பட பலர் கலந்து கொண்டனர். எழுத்தாளர் நெல்லை கவிநேசன் நிகழ்ச்சி யை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சி முடிவில் சிவகாமி புத்தகாலயம் பதிப்பாளர் டாக்டர் ரத்தினவேல் ராஜன் நன்றி கூறினார்.