BREAKING NEWS

தாம்பரம் ஜீஸ்கடை உரிமையாளரை கடத்திய கும்பலை 24மணிநேரத்தில் மடக்கி பிடித்த காவல்துறை.

தாம்பரம் ஜீஸ்கடை உரிமையாளரை கடத்திய கும்பலை 24மணிநேரத்தில் மடக்கி பிடித்த காவல்துறை.

செங்கை ஷங்கர், செங்கல்பட்டு.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் இரும்புலியூர் GST ரோட்டில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த நூருல் உசேன் என்பவது மகன் அன்வர்உசேன் (30)மற்றும் ஜஹாங்கிர் உசேன் மகன் இக்பால் உசேன்(22) ஆகிய இருவரும் கடந்த ஒரு வருடமாக சலாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் மாதம் ரூபாய் 60.000/- வாடகைக்கு மெட்ரோ ஜூஸ் பார்க் என்ற ஜூஸ் கடையை நடத்தி வருகின்றனர்.

 

 

இந்நிலையில் அன்வர் மற்றும் இக்பால் கடையில் இருந்த போது திடீரென காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கல்லாவில் இருந்த அன்வரிடம் காரில் போலீஸ் அதிகாரி இருக்கிறார் மொபைல் எடுத்து கொண்டு வா என்று அழைத்த சென்று காரில் கடத்தி சென்று விட்டனர். அன்பவரின் நண்பர் இக்பால் அன்வர் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டிருந்ததால் இக்பால் தாம்பரம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

 

தாம்பரம் காவல் ஆய்வாளரின் தலைமையிலான தனிப்படையினர் இக்பாலை அழைத்துக் கொண்டு விசாரணை செய்து வந்த நிலையில் அன்வரின் தொலைபேசி எண்மூலம் தனிப்படையினர் மேற்படி இடத்திற்கு சென்று அன்வரை மீட்டு காவல்
நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

 

காரில் கடத்தி சென்ற திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல் தன்னை தாம்பரத்திலிருந்து வண்டலூர் வழியாக தனது கண்ணை கட்டிவிட்டு நாவலூர் வரை அழைத்து சென்று பணம் கேட்டு மிரட்டியதால் தன் பாக்கெட்டில் வைத்திருந்த ரூபாய் 10,000 எடுத்து கொடுத்ததாகவும் மேலும் தனது மூன்று வங்கிக் கணக்கில் இருந்த ரூபாய் 80,000 /- பணத்தை PayTM வழியாக பரிமாற்றம் செய்து எ கொண்டு தனது உயர்ரக செல்போனையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து மீண்டும் காரில் அழைத்து வந்து பொன்மார் தரைப்பாலம் அருகில் இறக்கிவிட்டு சென்றுவிட்டதாகவும் பின்னர் அவ்வழியாக வந்த லாரி மூலம் கண்டிகை வரை வந்ததாக தெரிவித்தார்.

 

 

இந்நிலையில் எதிரிகளை தேடிவந்த நிலையில் மறுநாள் காலை கிடைத்த ரகசிய தகவல்படி நாவலுார் அருகே பதுங்கி இருந்த எதிரிகள் திரிபுராவை சேர்ந்த ராகுல் அமீன் மகன் அல்கஸ்மியா சாதிக்மியா மகன் ஜலில்மியா அப்துல்காதர் மகன் பெர்பேஜ் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்து அவர்களிடம் இருந்து பணம்-40 ஆயிரம் பணம் செல்போன், கார் ஆகியவற்றை கைப்பற்றி மூவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான மீதமுள்ள இருவரை தேடிவருகின்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )