தாய்லாந்தில் வெண்கல பதக்கம் வென்ற மானாமதுரை சேர்ந்த கராத்தே மாஸ்டர்.
சிவகங்கை மாவட்ட மானாமதுரை சேர்ந்த நாகர்ஜூன் ஷிட்டோ – ரியூ கராத்தே பள்ளி கராத்தே ஆசிரியர் தாய்லாந் நாட்டில் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தில் 3வது மாஸ்டர்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன் போட்டி. இப்போட்டியில் இந்தியா அணியில் கலந்துகொண்டனர்.
அணியில் ஒருவரான சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த கராத்தே மாஸ்டர் சிவ நாகர்ஜூன் கராத்தே பிரிவில் வெங்கலப்பதக்கம் வென்று மானாமதுரை சேர்ந்த கராத்தே மாஸ்டர் சிவ நாகர்ஜூன் தமிழகத்தின் சார்பாகவும் சிவகங்கை மாவட்டத்தின் சார்பாகவும் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இப்போட்டியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த கராத்தே மாஸ்டர் சிவ நாகர்ஜூன் தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று இந்திய தேசத்திற்காக தாய்லாந்தில் நடைபெற்ற உலகளாவிய கராத்தே போட்டியில் வெங்கலப்பதக்கம் வென்றவர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நாகர்ஜூன் ஷிட்டோ – ரியூ கராத்தே பள்ளி இந்தியா ஸ்போர்ஸ் கராத்தே சங்கம் தமிழ்நாடு சார்பில் மாநில அளவில்லான கராத்தே போட்டி தனியார் மஹாலில் நடைபெற்றது. இப்போடியை சிவ நாகர்ஜூன் உமா நாகர்ஜூன் துவைக்கி வைத்தவர்கள்.
இப்ப பள்ளியை கடந்த10 ஆண்டுகளாக மிகவும் சிறப்பு மிக்க பள்ளியாக மானாமதுரையில் புகழ்பெற்ற கராத்தே பள்ளி பொதுமக்களின் மத்தியில் மிக வரவேற்பு பெற்று வருகிறது.இதுவரை தங்கள் கராத்தே பள்ளியில் படித்த மாணவ மாணவியர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக பள்ளி கல்லூரி ஆசிரியர்களாகவும் தமிழ்நாடு காவல்துறையிலும் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியில் ஒன்பது வயதிற்கு மேலான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் மாநிலங்களிலும் மிகத் திறமை வாய்ந்த கராத்தே பள்ளி ஆசிரியர் தற்போது நடைபெற இருக்கக்கூடிய தாய்லாந்த் நாட்டில் உலக அளவிலான கராத்தே போட்டி தமிழ்நாட்டில் இரண்டு பேர்கள் மட்டுமே தேர்வாகி இருந்த நிலையில்,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நாகர்ஜூன் ஷிட்டோ – ரியூ கராத்தே பள்ளி ஆசிரியர் சிவ நாகர்ஜூன் தாய்லாந்தில் நடக்கக்கூடிய கராத்தே போட்டியில் ஆடுகளத்தில் விளையாடி நமது இந்திய நாட்டிற்கான விளையாடி வெண்கல பதக்கத்தை வெற்றி பெற்று மானாமதுரை திரும்பினார்.
இதனை அறிந்து நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களும் அவரது பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் கராத்தே ஆடை அணிந்து மேளதாளத்துடன் மாலை அணிவித்து வரவேற்பளித்தனர்.
செய்தியாளர் வி ராஜா.