BREAKING NEWS

தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் கட்டப்படும் கட்டிட பணிக்கு பூமி பூஜை.

தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் கட்டப்படும் கட்டிட பணிக்கு  பூமி பூஜை.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் கட்டப்படும் கட்டிட பணிக்கு செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும்ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்கள்.

 

தொடக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். திருப்பூர் நகராட்சி 4ம் மண்டல தலைவரும், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன்.
நகர கழக செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

அப்போது செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இவர்கள் கூறியதாவது,தாராபுரம் நகராட்சி 19வது வார்டு பகுதியில் தினசரி மார்க்கெட் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

 

இதில் இட நெருக்கடியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர்.மழைக்காலங்களில் தண்ணீர் மார்க்கெட்டுக்குள் தேங்கி நின்று வியாபாரத்தை பாதிப்படைய செய்து வந்தது.

 

இதற்கு நிரந்தர தீர்வுகான கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் புதிய 55 கடைகள் கட்டப்பட உள்ளது அதற்கான கட்டுமான பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.

 

அப்போது நகராட்சி ஆணையாளர் ராமர், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ் தனசேகர், நகராட்சி துணைத் தலைவர் ரவிச்சந்திரன், நகர கழக தலைவர் கதிரவன் நகரத் துணைச் செயலாளர்கள் கமலக்கண்ணன், தவச்செல்வன்,  செலின், நகரப் பொருளாளர் கபடி சக்திவேல்,

 

மாவட்ட பிரதிநிதிகள் யூசுப், சீனிவாசன், அய்யப்பன், பைக் செந்தில் குமார்,
நகராட்சி கவுன்சிலர்கள் துரை. சந்திரசேகர், இராஜேந்திரன், முரட்டாண்டி, ஸ்ரீதரன்,  இராஜாத்தி பாண்டியன், சாந்தி இளங்கோ, முத்துலட்சுமி பழனிச்சாமி உஷாணா பானு சேக்பரித், சாஜிதா பானு அகமது பாஷா, உமா மகேஸ்வரி ஹரிஹரசுதன், மலர்வழி கணேசன், தனலட்சுமி அய்யப்பன், ஷாலினி பவர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS