தாளநத்தம் அருகே தொடர் மழைக்கு வீட்டு சுவர் நனைந்து வீடு இடிந்தது.
தாளநத்தம் அருகே தொடர் மழைக்கு வீட்டு சுவர் நனைந்து வீடு இடிந்தது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தாள நத்தம் ஊராட்சி கோவில்வனம் பகுதியை சார்ந்த முருகன்45 விவசாயி .மனைவி சந்திரா. ஒரு மகன் ஒரு மகள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் வீட்டின்மண் சுவர் மீது நனைந்து இன்று காலை 4:00 மணி அளவில் வீட்டில் இரு பக்க சுவர் சரிந்து விழுந்தது.
அதிஷ்டவசமாக குடும்பத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை வீட்டின் பாத்திரங்கள் துணிமணிகள்சுவர் இடிந்ததில் சிக்கிக் கொண்டது.இதுகுறித்து உடனடியாக தாளநத்தம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ். கடத்தூர் வருவாய் ஆய்வாளர் ஸ்டாலின் உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வீட்டின் சேதம் குறித்து ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட முருகன் சந்திரா தம்பதி கூறியதாவது நாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறோம் எங்களுக்கு வாழ்வாதாரம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறோம் .வீடு இடிந்ததால் புது வீடு கட்ட வசதி இல்லை.இதனால் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உதவி செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.