திசையன்விளை பேரூராட்சி யில் ரூ.23 லட்சம் செலவில் நலத்திட்டங்கள். பேரூராட்சி தலைவி ஜாண்சி ராணி அடிக்கல் நாட்டினார்.

திசையன்விளை பேரூராட்சி யில் ரூ 23 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கு பேரூராட்சி தலைவி ஜாண்சி ராணி அடிக்கல் நாட்டினார்.
திசையன்விளை பேரூராட்சி பகுதிகளில் 15 வது நிதிக்குழு திட்டத்தின் படி ரூ.23 லட்சம் செலவில் பேரூராட்சி வளாகம் மற்றும் பேருந்து நிலைய வளாகம் ஆகியவற்றில் பொது கழிப்பறை கட்டுதல் மற்றும் குடிநீர் பைப்லைன் விஸ்தரிப்பு ஆகியவை செயல்படுத்தபட உள்ளது. இந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா திசையன்விளை பேருந்து நிலையத்தில் பேரூராட்சி தலைவர் ஜாண்சி ராணி தலைமை யில் செயல் அலுவலர் கோபால் முன்னிலையில் நடந்தது. ஜாண்சி ராணி அடிக்கல் நாட்டி திட்டங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவரும் அ.தி.மு.க. நகர செயலாளருமான வி.பி.ஜெயக்குமார், அ.தி.மு.க. பிரமுகர் பிரதீப் ஸ்வீட்ஸ் முருகானந்தம், பேரூராட்சி கவுன்சிலர்கள் வக்கீல் பிரதீஸ்குமார், பிரேம்குமார்,சண்முகவேல்,ஆறுமுகதேவி லிங்கராஜ், தனசீலி புவனேசுவரி,லிவியா பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் நவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
