திசையன்விளை யில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா. மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி அமுதா கார்த்திகேயன் இனிப்பு வழங்கினார்.

திசையன்விளை யில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவி அமுதா கார்த்திகேயன் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி யின் 52 வது பிறந்த நாள் விழா திசையன்விளையில் கொண்டாடப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக மாநில காங்கிரஸ் விவசாய அணி செயலாளர் விவேக் முருகன் கலந்து கொண்டார். அமுதா கார்த்திகேயன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். முன்னதாக விவேக் முருகன் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சி யில் மாநில பேச்சாளர் மருதூர் மணிமாறன் ,முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் விஜயபெருமாள்,மாவட்ட இணைசெயலாளர் ஐசக்,ராதாபுரம் கிழக்கு வட்டார தலைவர் பவான்ஸ், நகர காங்கிரஸ் செயலாளர் சங்கர், காங்கிரஸ் பிரமுகர்கள் விஜயகுமார், கொடி ஜெயராஜ் உட்படபலர் கலந்து கொண்டனர்.
