திசையன்விளை ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா. காவலர் பயிற்சிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

திசையன்விளை ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. திசையன்விளை ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தலைவர் எஸ்.எம்.டி.அலெக்ஸ் தலைமை யில் குருநாதன் மகாலில் நடந்தது.
செயலாளர் வேல்முருகன் வரவேற்று பேசி அறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரோட்டரி கிளப் பொறுப்பு கவர்னர் எம்.சலீம் பதிய நிர்வாகிகளுக்கு பதவிபிரமாணம் செய்து வைத்து உரையாற்றினார். இதன்படி புதிய தலைவராக பி.முருகேசன், செயலாளராக வழக்கறிஞர் எஸ்.ஜேம்ஸ் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
நலத்திட்ட உதவியாக காவலர் பயிற்சி அளித்து வரும் முன்னாள் உடற்பயிற்சி ஆசிரியர் தவசிக்கனியிடம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளர் டி.எஸ். ராம் குமார் வாழ்த்தி பேசினார். ஆசிரியர் அருள் தாசன் நிகழ்ச்சி யை தொகுத்து வழங்கினார்.
விழாவில் திசையன்விளை ரோட்டரி கிளப் உறுப்பினர் கள் சதாசிவன்,கலசலிங்கம்,கோவிந்தராஜன்,முத்துலிங்கம், செல்வகுமார், கனகசபாபதி, ஆனந்த குமார், அன்புராஜ்,அப்துல் பாசித்,கணேச பாண்டி,குமரகுரு,லிங்கராஜ்,முத்துவேல்,நமச்சிவாயம்,பால்ராஜ், சுடலையாண்டி,லவ்சன் சுபாஷ், சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
