BREAKING NEWS

திட்டக்குடியில் அடிப்படை வசதிகள் கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம்.

திட்டக்குடியில் அடிப்படை வசதிகள் கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம்.

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திட்டக்குடி நகராட்சியில் பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

 

இந்த தெருமுனை பிரச்சாரத்திற்கு ‌ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரத் தலைவர் சேட்டு என்கிற செல்வராசு தலைமை தாங்கினார். ஒன்றிய குழு நிர்வாகி சரவணன், நகர துணை செயலாளர் பாலமுருகன், நகர பொருளாளர் உத்தமன், துணைச் செயலாளர் ஆதி கபிலன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்.

 

இப்பிரச்சாரத்தில் திட்டக்குடியில் நிலவும் 13 விதமான அடிப்படை கோரிக்கைகளை முன்னுறுத்தி கட்சியின் மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட நிர்வாக குழு சுப்ரமணியன்,

 

நல்லூர் ஒன்றிய செயலாளர் முருகையன், ஒன்றிய துணைச் செயலாளர் தேவா, காசிநாதன், மங்களூர் ஒன்றிய செயலாளர் நீதி உலகநாதன், ஒன்றிய பொருளாளர் அம்பிகா, ஒன்றிய குழு ராஜ்குமார், விச வட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆகியோர் விளக்க உரையாற்றினார்.

 

மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய குழு நிர்வாகிகள் சக்திவேல், குப்புசாமி, தனவள்ளி, வெங்கடேஷ், மனோகரன், வள்ளியம்மை, சஞ்சய் காந்தி, சமயபுரம் உள்ளிட்டோரும் கிளைச் செயலாளர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )