திண்டுக்கல்லில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், தென்மண்டல பொறுப்பாளருமான ஆர்.ரியாஸ் அகமது கண்டனம்.

திண்டுக்கல்லில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், தென்மண்டல பொறுப்பாளருமான ஆர்.ரியாஸ் அகமது செய்தியாளர்களிடம் பேசுகையில் … தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தலைமை அலுவலகத்தில் அதிகாலையில் இருந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் துணை ராணுவ படை பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னை, கடலூர், மதுரை, திண்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அலுவலகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் பயாஸ்அகமது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி சேத்தியாதோப்பு காவல் நிலையத்திற்ககு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் யூசிப் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மற்றும் அமலாக்க இயக்குநரகம் (இ.டி) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக சோதனைகளை நடத்தி கடந்த 24 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்ட பி.எஃப்.ஐ. உறுப்பினர்களை கைது செய்துள்ளது.
நாடு முழுவதும் பி.எஃப்.ஐ. அலுவலகங்களில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்துறையினர் நடத்திய சோதனையில் இதுவரை 106 பேர் கைது செய்து உள்ளனர்.அதன் விவரம்:
ஆந்திரா-5, அசாம்-9, டெல்லி-3
கர்நாடகா-20, கேரளா-22, ம.பி.-4,
மகாராஷ்டிரா-20, புதுச்சேரி-3
ராஜஸ்தான்-2, தமிழ்நாடு-10,
உ.பி.-8 தமிழகத்தில் தொடர்ந்து வந்து முஸ்லிம் சிறுபான்மை மக்களை நசுக்கிறார்கள் திமுக அரசாங்கம் இந்நிகழ்வை வேடிக்கை பார்க்க கூடாது. என்.ஐ.ஏ.க்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது. மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஒரு குறிப்பிட்ட மாநிலங்களில் பார்த்தீங்கன்னா அங்கே ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள்.
அந்த மாதிரி தமிழக முதல்வர் அவர்கள் சிறுபான்மையின் பாதுகாவலன் என்று சொல்லக்கூடியவர் .இது சம்பந்தமாக என்.ஐ.ஏ. க்கு ஒத்துழைப்பு கொடுக்க கூடாது. இந்த சம்பவம் சிறுபான்மை மக்களை மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது.
என்.ஐ.ஏ. ரெய்டு நேரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திண்டுக்கல்லில் காவலர்கள் அதிகமாக குவித்து பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாதைகளை வழிமறித்து வேண்டும் என்றே செய்கிறார்கள்.
ஒன்றிய அரசின் பா.ஜ.கட்சியினர் மாட்டை வைத்தும், மதத்தை வைத்தும் தான் அரசியல் செய்து வருகிறார்கள் இதை வன்மையாக கண்டிக்கிறோம் என அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், தென்மண்டல பொறுப்பாளருமான ஆர்.ரியாஸ் அகமது பேசினார்.