BREAKING NEWS

திண்டுக்கல்லில் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி பகுதியில் ரூ 4.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை தற்போது பெய்த மழையில் கரைந்து போனதால் பொதுமக்கள் அதிர்ச்சி.

திண்டுக்கல்லில் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி பகுதியில் ரூ 4.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை தற்போது பெய்த மழையில் கரைந்து போனதால் பொதுமக்கள் அதிர்ச்சி.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் நிதியில் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி பகுதியில் ரூ 4.50 லட்சம் மதிப்பில் ஒரு மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை தற்போது பெய்த மழையில் கரைந்து போனதால்,

 

பொதுமக்கள் அதிர்ச்சி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம் காரணமாக காணாமல் போன நாலு லட்சத்து 50 ஆயிரம் தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

 

தொடர்ந்து திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகள் நடைபெறும் அனைத்து திட்டங்களிலும் இதேபோல் அரசு அதிகாரிகள் ஆதரவுடன் ஒப்பந்ததாரர்கள் முறைகேடு ஈடுபட்டு வருவதாகவும்,

 

பணிகள் அனைத்தும் தரமற்ற முறையில் இருப்பதாகவும் தமிழக முதல்வர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் தலையிட வேண்டும் தரமற்ற பணிகளை செய்த ஒப்பந்ததாரர்கள் அதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )