திண்டுக்கல்லில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது, நகை, கத்தி, இரண்டு சக்கர வாகனம் பறிமுதல்.

திண்டுக்கல் ரயில்வே மேம்பாலம் அருகே கடந்த 9-ம் தேதி குருசாமி என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி மோதிரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
இதுகுறித்து நகர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேற்படி சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் நகர் டி எஸ் பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் ஆய்வாளர் உலகநாதன் தலைமையில்,
நகர் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் சிறப்பு சார்பு ஆய்வாளர் வீரபாண்டியன், காவலர்கள் ஜார்ஜ் எட்வர்ட் ராதாகிருஷ்ணன் முகமது அலி விசுவாசம், சக்திவேல் ஆகியோர் சிசிடிவி காவலர்கள் ஜான் மற்றும் செல்வி உதவியுடன் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து குருவி சரவணன் குட்லி பிரபு ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ஒன்றரை பவன் தங்க நகை, 4 செல்போன்கள் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
