திண்டுக்கல் அருகே பெண்ணிடம் கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகள் கைது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட செங்காட்டு காலனியில் வசிக்கும் பஞ்சவர்ணம் என்பவர் இன்று காலை சுமார் 7 மணி அளவில் கூலி வேலைக்கு செல்லும்பொழுது சாலையின் எதிர்ப்புறம் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூவர் அந்த பெண்மணியின் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது சார்ந்து அவர் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து கூறியதாவது… எனது பெயர் பஞ்சவர்ணம் நான் சித்தையன்கோட்டை செங்காட்டு காலனியில் வசிக்கிறேன்.
இதற்கிடையே இன்று வழக்கம் போல் நான் கூலி வேலைக்குச் சாலையில் நடந்து செல்லும் வழியில் எனக்கு எதிரே வந்து வாகனத்தில் மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் என்னை வழிமறித்து செயினை சுமார் 70 ஆயிரம் மதிக்கதக்க எனது தாலிச் செயினை பறித்துச் சென்றனர்.
நான் அலரிஅடித்துக் கொண்டு அருகில் உள்ளவர்களை சத்தமிட்டு கூப்பிட்டவுடன் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி சென்று மறைந்து விட்டனர்.
மேலும் இது சார்ந்து செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளரை சந்தித்து புகார் அளித்ததாகவும் அதன் அடிப்படையில் செம்பட்டி காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.
மேலும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள காலணி பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.