திண்டுக்கல் அருகே பேராசிரியர் வீட்டை உடைத்து கொள்ளை அடித்த நபர் கைது, 3.1/2 பவுன் தங்க நகை பறிமுதல் – தாலுகா காவல்துறையினர் நடவடிக்கை.

திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரி அருகே மகாத்மா நகரில் பேராசிரியர் சசிகுமார் என்பவர் வீட்டின் கதவை கடந்த 27/1/2021 உடைத்து 3.1/2 பவுன் கொள்ளையடித்தது சம்பந்தமாக தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
.மேற்படி சம்பவம் குறித்து எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் ஏ.எஸ்.பி அருண் கபிலன் மேற்பார்வையில் தாலுகா காவல் ஆய்வாளர் கஜேந்திரன் சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையிலான போலீசார் தோமையார்புரம் பகுதியில் வாகன சோதனையின் போது,

சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிந்த விஷ்ணுகுமார் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் மகாத்மா நகரில் வீட்டை உடைத்துக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனை அடுத்து விஷ்ணுகுமாரை கைது செய்து அவரிடமிருந்து 3.1/2 பவுன் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
CATEGORIES திண்டுக்கல்
