திண்டுக்கல் அருகே மேற்கு மரியநாதபுரத்தில் கஞ்சா, குட்கா தடுப்பு மற்றும் பணம் மோசடி பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் அருகே மேற்கு மரியநாதபுரத்தில் கஞ்சா, குட்கா தடுப்பு, காவலன் செயலி, குழந்தை திருமணம், பெண்களின் பாதுகாப்பு மற்றும் பணம் மோசடி பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு டவுன் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இதில் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்- இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த முகாமில் ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.