திமுகவின் செயல் திட்டங்களைப் பார்த்து அஞ்சுகின்றனர் – முனைவர்.சபாபதி மோகன்.
முன்னாள் திமுக பொதுச் செயலாளர் அமைச்சருமான அனைவராலும் பேராசிரியர் என அன்போடு அழைக்கப்படும் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை ஒட்டி திமுக சார்பில் கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது நூற்றாண்டு நினைவிழா பொதுக்கூட்டங்கள் தமிழக முழுவதும் திமுக அமைச்சர்கள், தலைமைக் கழக பேச்சாளர்கள் உள்ளிட்ட தலைவர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் , காஞ்சிபுரம் மாநகரம் மூணாவது பகுதி திமுக கழகம் சார்பில் மிலிட்டரி சாலை அருகே பகுதி கழக செயலாளர் ஆ தசரதன் வரவேற்பு உடன் பொதுக்கூட்டம் துவங்கியது.
மாநகர கழக செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் சுந்தர், மாவட்ட கழகத் துணைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம், மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் கழக கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினர்.
இப்போது கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன் பேசுகையில்,
திமுக அரசு இந்து மக்களுக்கு எதிரான கட்சி என கூறி கடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூறிய நிலையில் தற்போது இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் செய்யப்படும் கும்பாபிஷேகங்கள் கோயில் புனரமைப்புகள் சிதலமடைந்த கோயில்களை மீண்டும் பொது மக்களின் வழிபாட்டிற்கு எடுத்து வருதல் உள்ளிட்டவைகளை செய்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இத்துறையின் செயலாகும்.
தமிழக முதல்வரும் , திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருவது திமுக இந்துக்களுக்கு எதிரானது அல்ல என்பது தற்போது வேதவாக்காக மாறி உள்ளது.
இதேபோல் பெண்களுக்கான இலவச பயணம், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மகளிர் உதவிக் குழு கடன்கள், புத்தக வாசிப்பை அதிகரிக்க மாவட்டம் பெறும் புத்தகத் திருவிழா, மாணவர்கள் தடையின்றி கல்வி பயில ஊக்கத்தொகை, அவர்களின் தனித்திறமை வெளிக் கொணரும் வகையில் கலைத்திருவிழா என எண்ணற்ற செயல் திட்டங்களால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அஞ்சி வருகிறது.
முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவராக இருந்த கலைஞர் காலத்தில் இருந்த எங்களது இனமான பேராசிரியர் அவருக்கு பக்கபலமாக இருந்து தொடர்ந்து திராவிட கழகத்தை வெற்றியின் பக்கம் அழைத்து செல்வதில் பெரும் பங்காற்றியவர். அவரது நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடுவது, அவரின் சிந்தனையை, எழுத்துக்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அமையும் இந்த பொதுக்கூட்டங்கள்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 40 வெற்றி பெற தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும் தயாராக உள்ளதாகவும் பாரத பிரதமரை அறிவாலயத்தில் தேர்வு செய்யும் நிலை விரைவில் வரவுள்ளது என்ற செய்தி தொண்டர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்து வருகிறது.
ஆகவே தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றி வரும் நமது முதல்வருக்கு என்றும் உறுதுணையாக இருந்து அவரின் எண்ணத்தை நிறைவேற்றிட அனைவரும் அயராது பாடுபடுவோம் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ் கே பி சீனிவாசன், சிகாமணி, மூன்றாவது மண்டலக்குழு உறுப்பினர் சாந்தி சீனிவாசன், சிகாமணி மாமன்ற உறுப்பினர்கள் பூங்கொடி தசரதன், ரமணி பொன்னம்பலம் ஷோபனா கண்ணன் கார்த்திக், சங்கர், பகுதி கழக அவைத் தலைவர் மோகன்வேல், பகுதி கழக துணை செயலாளர் மலர்மன்னன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.