BREAKING NEWS

திமுக அரசை கண்டித்து ஆண்டிப்பட்டியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

திமுக அரசை கண்டித்து ஆண்டிப்பட்டியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அதிமுக சார்பாக மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆண்டிபட்டி தெப்பம்பட்டி சாலை பிரிவு அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு,

 

ஆண்டிப்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக தேனி மாவட்ட அதிமுக பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் கலந்து கொண்டு பேசினார்.

 

 

ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விரோத திமுக அரசை கண்டித்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )