BREAKING NEWS

திமுக எம் பி ராசா மீது நடவடிக்கை எடுக்க முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் வேண்டுகோள்.

திமுக எம் பி ராசா மீது நடவடிக்கை எடுக்க முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் வேண்டுகோள்.

திருப்பூர் மாவட்ட முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைமை அலுவலகத்தில் கூட்டமைப்பின் தலைவர் லயன் வி.டி.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியதாவது இந்துக்களை இழிவாக பேசி வரும் திமுக எம்பி ராசாவை முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பாக வன்மையாக கண்டிப்பதாகவும்,

 

இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் ஜாதி மத மோதலை தோன்றியும் இந்துக்களின் மனம் புண்படும்படியும் பேசி வரும் ராசா மீது முதல்வர் தலையிட்டு அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் தக்க நடவடிக்கை எடுக்கும் முறை தமிழகம் முழுவதும் முக்குலத்தோர் சமுதாய மக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல். ரயில் மறியல். உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தையும்,

 

 

மேலும் தீவிரப் படுத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாவட்டம் தோறும் வழக்கு பதிவு செய்து ராசாவை கைது செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தனர்.

 

மேலும் வருகின்ற திங்கட்கிழமை முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக ஊர்வலமாக சென்று திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க புகார் மனு அளிக்க இருப்பதாக தலைவர் வீ.டி.பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் உடன் செயலாளர் தேளி காளிமுத்து, பொருளாளர் பசும்பொன் பாலு.

 

மற்றும் நிர்வாகிகள் தாமோதரன், ராஜா ராமர், அய்யனார், சிவா, குமரேசன் காங்கேயம் சிவக்குமார், உதயக்குமார் .கணேஷ், வெற்றி, செல்லதுரை .சாமிநாதன், தங்கராஜ், கவின், சிவா .கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )