திமுக ஒன்றும் இமாலய வெற்றியை பெறவில்லை – அதிமுக மாணவரணி கூட்டத்தில் முன்னால் எம்.பி.ரத்தினவேலு பேச்சு.

அதிமுகவில் ஒற்றை தலைமை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுகவின் அனைத்து பிரிவினரும் ஆலோச கூட்டம் நடத்தி தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக திருச்சியில் மாநகர மாவட்ட மாணவர் அணி சார்பில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் திருச்சியில் கச்சினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேலு, நிர்வாகிகள் ஐயப்பன், வனிதா, வெல்லமண்டி பெருமாள் மற்றும் மாநகர மாவட்ட கழக செயலாளர், அனிச் செயலார்ளகள், வட்ட செயலாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேலு 70 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இது ஒரு பலமான கூட்டணி. அதிமுக மட்டும் 66 இடங்களில் தனித்து வெற்றி பெற்றுள்ளது. திமுக ஒன்றிய இமாலய வெற்றி பெறவில்லை வெற்றி வித்தியாசம் 3% மட்டுமே. இந்த மூன்று சதவீத வெற்றியை நான்கு ஆண்டுகளில் எளிதில் கடந்து விடலாம். எனவே இந்த இயக்கத்தை வழி நடத்துகிற தகுதி, தலைமை, திறமை எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது.
புரட்சித்தலைவியிக்கு பீனிக்ஸ் பறவை போல நினைவாலயத்தை எழுப்பினார். புரட்சித்தலைவி இல்லத்தை ஒரு நினைவில்லமாக மாற்றினார். அது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது மாறி இருக்கலாம். இன்று கழகத்தில் பல்வேறு பணிகளை அவர் நடத்தி முக்கிய பிடித்துள்ளார். எனவே அவரது கரத்தை வலுப்படுத்துவது தான். இந்த இயக்கம் எப்பொழுதும் திமுகவுக்கு எதிர்புணர்ச்சி இயக்கம். காலம் மாறி இருக்கலாம் ஆனால் தடம் மாறவில்லை. எந்த திமுகாவால் அதிமுக உருவானதோ அதே இயக்கம் திமுக 50 ஆண்டு கழித்து இந்த இயக்கத்திற்கு தலைமையை உருவாக்குகிறது.
அன்று கலைஞர் உருவாக்கினார் இன்று மு.க.ஸ்டாலின் உருவாக்குகிறார் எனவே தடைகளை உடைத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்று வழி நடத்துவார். இது உடைந்து போகிற கட்சி அல்ல, இது கொள்கை பாசறை கூடாரம் என பேசினார். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் கழக நிர்வாகிகள் முகுந்தன் தவசி ராணி சிராஜுதீன் முற்பட பலர் கலந்து கொண்டனர்.