திமுக தெருமுனை கூட்டம் எம்எல்ஏ நிவேதா முருகன் நடிகர் வாசு விக்ரம் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியம் திருவிளையாட்டம், கொத்தங்குடி ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் 70 – வது பிறந்தநாள் விழாவையொட்டி திமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல்மாலிக் தலைமை வைத்தார். மாவட்ட துணை செயலாளர் மு. ஞானவேலன், தலைமை பொதுக்குழ உறுப்பினர் ஜி.என் ரவி, தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம். ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அமுர்த விஜயகுமார், ஒன்றிய அவைத் தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய துணைச் செயலாளர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் தம்பு.மோகன் ஆகியோர் வரவேற்று பேசினர்.
இதில் பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், தலைமை கழக பேச்சாளர் திரைப்பட நடிகர் வாசு.விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகளை விளக்கி பேசினர்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.அருள்செல்வன், எம்.எம்.சித்திக், விஜயபாலன், தரங்கை பேரூர் செயலாளர் முத்துராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் வெற்றிவேல், கபிலன், மாவட்ட பிரதிநிதிகள் இளங்கோவன், கருணாநிதி, கே.பி.ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் ரெங்கராஜ், பைலட், ஒன்றிய கவுன்சிலர் கிருபாவதிசிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜே கே வினோத் பாண்டியன் கிளைக் கழக செயலாளர் அன்புச்செல்வன் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.