திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் தந்தை பெரியாரின் 49 ஆவது நினைவு நாளில் அனுசரிப்பு.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த ஐவதக்குடி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஈ.வெ.ராமசாமியின் 49 வது நினைவு நாளை முன்னிட்டு அவரின் திரு உருவ சிலைக்கு திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்க. நாராயணசாமி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.
அப்போது மாவட்ட கவுன்சிலர் நகர் சக்தி விநாயகம்,மாளிகை மேடு ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், ஒன்றிய மாணவர் அணி மாரிமுத்து, ஆதியூர் உதயசூரியா, திருப்பெயர் கிளைச் செயலாளர் சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
CATEGORIES அரசியல்
TAGS Dmkஅரசியல்கடலூர்கடலூர் மாவட்டம்கடலூர் வேப்பூர்தந்தை பெரியார் 49 வது ஆண்டு நினைவு நாள்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திமுக