திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் நாகரிகமற்ற முறையில் பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் பேசிய திமுக பேச்சாளர்.

தஞ்சை மாநகர திமுக சார்பில் திமுக முப்பெரும் விழா தெருமுனை கூட்டம், தஞ்சை ரயிலடி பகுதியில் நடைபெற்றது இக்கூட்டத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் சைதை சாதிக்கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் நாகரிகமற்ற வகையில் அண்ணாமலையை ஒருமையில் பேசி கடும் விமர்சனம் செய்தார்.
அதில் யூஸ் பண்ணி போட்ட நிரோத்(ஆணுறை) என்று அவரை குறிப்பிட்டார். அந்த பேச்சை கேட்டதும் பெண்கள் முகம் சுளித்தனர் மேலும் பிரதமர் மோடி டிவியில் எப்பொழுது பேசினாலும் நாடு மயிராக போகப் போகிறது என்று பேசினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் அதிமுக அமித்ஷா திமுக ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது என்றும் அதிமுகவை யார் வைத்திருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை அதிமுக அமித்ஷா காலடியில் கிடக்கிறது அதிமுகவுக்கு சுயமாக கொள்கை கிடையாது சுயமாக செயல்படவில்லைை.

பிஜேபி என்ற மலைப்பாம்பு அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக முழுங்கிக் கொண்டிருக்கிறது என்றும் அதிமுக அழியக்கூடாது ஆயிரம் தான் இருந்தாலும் அவர்கள் நமது பங்காளி என்று பேசினார்.
இக்கூட்டத்தில் எம்எல்ஏ டிகேஜி நீலமேகம் மேயர் ராமநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
