திருக்கடையூரில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர்- டீ மணல்மேட்டில் உள்ள வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் காச நோய் பால்வினை நோய் இனப்பெருக்க வழி தொற்று பரிசோதனை மற்றும் மருத்துவ விழிப்புணர்வு முகாம் டீ மணல்மேடு,
ஒழுகைமங்கலம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் நான்கு வழி சாலை பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு பரிசோதனை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று காசநோய், பால்வினை நோய், இனப்பெருக்க வழி தொற்று பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெல்ஸ்பன் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு அலுவலர் ஜூலியஸ் தூய மணி, மக்கள் தொடர்பு அலுவலர் நீல்கிரண், ஸ்ரீமன் நாராயண ஆகியோர் செய்துஇருந்தனர்.
CATEGORIES மயிலாடுதுறை
TAGS தமிழ்நாடுதரங்கம்பாடி தாலுகாதலைப்பு செய்திகள்திருக்கடையூர்மயிலாடுதுறை மாவட்டம்வேல்ஸ்பன் நிறுவனம்