BREAKING NEWS

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தை அமாவாசையை பவுர்ணமியாக்கிய விழா நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தை அமாவாசையை பவுர்ணமியாக்கிய விழா நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அபிராமி அம்மன் தனது பக்தர் அபிராமி பட்டரின் பக்திக்கு இணங்க தை அமாவாசை நாளை அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய அதிசய நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். விழாவில் அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

 

தஞ்சை ஆண்டு வந்த சரபோஜி மன்னர் தை அமாவாசை நாளில் பூம்புகார் சென்று கடலில் நீராடி விட்டு திருக்கடையூர் அமர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அப்போது மன்னரின் வருகையை கவனிக்காமல் சுப்பிரமணிய பட்டர் தியான நிலையில் இருந்தார்.

 

 

இதை கண்ட மன்னர் பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பி பட்டரே இன்று என்ன திதி என்று கேட்டார். அப்போது அபிராமி அம்மனின் தியான நிலையில் இருந்த சுப்பிரமணிய பட்டர் வாய் தவறி தை பவுர்ணமி எனக் கூறினார். அம்மாவாசை நாளை பவுர்ணமி என கூறியதால் அச்சத்தில் இருந்த சுப்பிரமணிய பட்டர் அபிராமி அம்மனை நோக்கி அந்தாதி பாடல்களைப் பாட தொடங்கினார்.

 

அப்போது அபிராமி அம்மன் பட்டருக்கு நேரில் தோன்றி தனது காதில் அணிந்துந்திருந்த தோடு ஒன்றை கழற்றி வானில் வீசினார். அது முழு நிலவாக வானில் ஒளி வீசி அமாவாசையை பவுர்ணமியாக மாற்றி காட்சியளித்தது. இந்த அரிய நிகழ்வை தொடர்ந்து சுப்பிரமணிய பட்டர் அபிராமி பட்டர் என சிறப்போடு அழைக்கப்பட்டார்.

 

தை அமாவாசை நாளான நேற்று ஓதுவர் மூர்த்திகள் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாட ஒவ்வொரு பாட்டுக்கும் தீப நைவேத்தியம் செய்தும் வழிபட்டனர். இதில் தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பெண்களுக்கு சுமங்கலி பிரசாதம் கொடுத்து ஆசி வழங்கினார்.

 

 

பின்னர் அபிராமி அம்மனுக்கு பால், தேன், இளநீர், பன்னீர், சந்தானம், விபூதி மற்றும் வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அபிராமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது.

 

முன்னதாக ஆனைகுளம் கரையில் அமைந்துள்ள எதிர்காலீஸ்வரர் கோவிலில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அபிராமி அம்மனுக்கு பால்குடம் சுமந்து வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 

CATEGORIES
TAGS