திருக்கழுகுன்றத்தில்பா.ஜ.க முன்னாள் மாநில நிர்வாகி மீது தாக்குதல் ஏராளமான போலீஸ் குவிப்பு.
செய்தியாளர் செங்கைஷங்கர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியை சேர்ந்தவர். துரைதனசேகரன் இவர் பாரதிய ஜனதா கட்சி (OBCஅணி) முன்னாள் மாநில செயலாளராக இருந்து வந்துள்ளார்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் வீடியோவை பா.ஜ.க நிர்வாகி தனசேகர் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து திருக்கழுகுன்றம் காவல் நிலையத்தில் பா.ஜ.க நிர்வாகி தனசேகர் மற்றும் கஞ்சா வியாபாரம் செய்த நான்கு பேரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்
இரு தரப்பினரையும் விசாரணை செய்து முடிந்த பிறகு தனசேகர் மீண்டும் வீட்டுக்கு திரும்பும் போது பின் தொடர்ந்து வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் பாஜக பிரமுகர் தனசேகரை சரமாரியாக வெட்டியும் தாக்கியும் உள்ளனர்
தனசேகர் தனது முகநூல் பக்கத்தில் கஞ்சா விற்பனை அதிகமாக இருப்பதாக வீடியோ பதிவு செய்த அடுத்த 17 மணி நேரத்தில் மர்ம நபர்கள் தனசேகரின் இனோவா கார் கண்ணாடியை உடைத்து சேதம் செய்து தனசேகரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்
இரத்த வெள்ளத்தில் இருந்த தனசேகரை மீட்ட அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகின்றார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூடியுள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்
பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.