திருச்சியில் டூவீலர் மீது கார் மோதி விபத்து.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கருப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர் தனது டூவீலரில் ஆத்தூர் சாலையில் உள்ள வாலிஸ்புரம் மாற்றுப்பாதை அருகே சென்றபோது இவருக்கு எதிரே வந்த கார் இவர் மீது மோதியது.
இந்த விபத்தில் பாலசுந்தரம் காயமடைந்தார். அவரை மீட்டு உடனடியாக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து பாலசுந்தரம் அளித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சேலம் மாவட்டம், காடையாம்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
CATEGORIES திருச்சி
TAGS கருப்பம்பட்டி கிராமம்குற்றம்டூவீலர் மீது கார் மோதி விபத்துதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சி மாவட்டம்
