BREAKING NEWS

திருச்சியில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு – ஹெல்மெட் திருடர்கள் கைவரிசை.

திருச்சியில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு – ஹெல்மெட் திருடர்கள் கைவரிசை.

செய்தியாளர் – சூ.வினோத் குமார்.

திருச்சி அம்மையப்பா நகரை சேர்ந்தவர் சத்யா வயது 27 . இவர் இன்று காலை தனது குழந்தையை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது ஹெல்மட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் சத்யா கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

 

உடனடியாக இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )