திருச்சியில் புனித செபஸ்த்தியார் ஆலய நூற்றாண்டு விழா.
திருச்சி சோமரசம்பேட்டை புனித செபஸ்தியார் ஆலயம் திருச்சியில் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த ஆலயம் 1922 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் கீழ் வயலூர், எட்டரை அல்லித்துறை, மேல சவேரியார்புரம், இனியானூர் மற்றும் புங்கனூர் கிராமங்களில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களுக்கு பங்கு ஆலயமாக விளங்குகின்றது.
இந்தப் புனித செபஸ்தியார் ஆலயத்தின் தற்போதைய பங்குத்தந்தை எட்வர்ட் ராஜா ஏற்பாட்டின் படி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் கலந்துகொண்டு ஆலயத்தை புனிதப்படுத்தி சிறப்பு திருப்பலி ஆற்றினார்.
தமிழகம் முழுவதும் இருந்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் இறை மக்கள் வருகை புரிந்து புனித செபஸ்தியாரை வழிபட்டுச் சென்றனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சிதிருச்சி சோமரசம்பேட்டை புனித செபஸ்தியார் ஆலயம்திருச்சி மாவட்டம்புனித செபஸ்தியார் ஆலய நூற்றாண்டு விழா