திருச்சியில் மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்.

திருச்சி மாநகராட்சி 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.மதிவாணன் அலுவலம் மற்றும் வார்டு மக்கள் அரசு சான்றிதழ் பெற இ-சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த அலுவலகம் மற்றும் இ.சேவை மையத்தை தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், அப்துல் சமத், துணை மேயர் திவ்யா, வன்னை அரங்கநாதன் பகுதி கழகச் செயலாளர்கள் வட்ட கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிஇ-சேவை மையம் திறப்பு விழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சி மாவட்டம்