திருச்சி அரசு மருத்துவமனையில் 17 வயது சிறுவனுக்கு எலும்பு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை
திருச்சி அரசு மருத்துவமனையில் 17 வயது சிறுவனுக்கு எலும்பு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை – மருத்துவமனை முதல்வர் வனிதா.

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சிறுவன் அப்துல்காதர் (17) 4மாதங்களுக்கு முன்பு வலது மூட்டில் வீக்கம், ஏற்பட்டடு நடப்பதற்கு சிரமமாக இருந்தது.
அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு எலும்பு முறிவு பிரிவில் சிகிச்சைக்கு சென்றார்.
சிகிச்சையின்போது எக்ஸ்ரே எடுத்து பார்த்த பொழுது தொடை எலும்பில் கட்டி இருப்பதை கண்ட மருத்துவர்கள் தொடர்ந்து சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ பரிசோதனைகள் மேற்கொண்டனர். பின்னர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உதவியுடன் கட்டியில் இருந்து திசு எடுத்து பரிசோதனை மேற்கொண்டனர்.
அப்போது தொடை எலும்பில் 15 சென்டிமீட்டர் அகலம் உடைய ” ஆஸ்டியோ சார்கோமா”(Osteosarcoma)என்ற புற்றுநோய் கட்டி இருப்பது உறுதி செய்தனர்.
இது போன்ற புற்று நோய்க்கு சென்னை போன்ற உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரைப்பது வழக்கம்.

இந்நிலையில் முதன்முறையாக திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா வழிகட்டுதல் படி எலும்பு முறிவு சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் கல்யாணசுந்தரம் மற்றும் மருத்துவர்கள் வசந்தராமன், ரமேஷ் பிரபு, ராபர்ட், கோகுலகிருஷ்ணன் ஆகியோருடன் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் செந்தில்குமார் மயக்கவியல் துறை தலைமை மருத்து சிவக்குமார் குழுவினருடன் இணைந்து கட்டியை அகற்றி பிரத்தியேகமாக செயற்கை மூட்டு உபகரணத்தை பொருத்தினர்.

தற்போது மேற்கொண்ட அறுவை சிகிச்சை மூலமாக நோயாளியின் கால் துண்டிக்காமல் பாதுகாக்கப்பட்டதுடன் அதன் முழு செயல்திறனும் இயல்பு போலவே மீட்கப்பட்டது. 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு கிடைக்கும் வகையிலும் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காகவும் சிறப்பு எலும்பு புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மாதம் ஒரு முறை மூன்று மாதங்களுக்கு அவருக்கு புற்றுநோய் சிகிச்சை மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்பட உள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் இந்த உயர் அறுவை சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
