திருச்சி அருகே பள்ளி மாணவியை கற்பழிப்பு – போக்சோ சட்டத்தின் கீழ் விவசாயி கைது.

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ள மேலரசூர் பகுதியை சேர்ந்தவர் பிச்சுமணி இவரது மகன் முத்து (50). இப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் மீது பிளஸ் 2பள்ளி மாணவியை கற்பழித்ததாக லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாலதி விசாரணை மேற்கொண்டதில் அரசு பள்ளியில் பிளஸ் 2வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி தன் வீட்டில் தனியாக இருந்த பொழுது மாணவியின் வாயை பொத்தி கற்பழித்ததாக விசாரணையில் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து விவசாயி முத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
CATEGORIES திருச்சி
