திருச்சி காட்டூரில் இஸ்லாமியர்களுக்கு கபர்ஸ்தான் அமைக்க இடம் ஒதுக்கி தரக்கோரி முதல்வர் ஸ்டாலினிடம் இடிமுரசு இஸ்மாயில் மனு.
திருச்சி காட்டூரில் இஸ்லாமியர்களுக்கு கபரஸ்தான் அமைக்க இடம் ஒதுக்கி தரக்கோரி முதல்வர் ஸ்டாலினிடம் இடிமுரசு இஸ்மாயில் மனு அளித்தார்.
திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சி ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது அர் ரஹ்மான் மஸ்ஜித் அமைப்பு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் இடம் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதில் திருச்சி காட்டூர் பகுதியில் ஏழை இஸ்லாமியர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர் இங்கு இறக்கும் இஸ்லாமியர்களை புதைப்பதற்காக கபர்ஸ்தான் இல்லை. ஆகையால் இதை அமைக்க அரசு சார்பில் இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
காட்டூர் ஆயில் மில் பஸ் நிறுத்தம் அருகே முதல்வர் ஸ்டாலின் காரை நிறுத்தி மனுவை பெற்றுக் கொண்டார் அப்போது பள்ளிவாசல் தலைவர் சையது உஸ்மான், செயலாளர் ஹைதர் அலி, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாவட்ட துணை செயலாளர் முகமது இக்பால், மாவட்ட இளைஞரணி தலைவர் மஜீத் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.