திருச்சி சஞ்சீவி நகரில்பாரத பிரதமரின் ஐந்து லட்சம் ரூபாக்கான இலவச காப்பீட்டு திட்ட முகாம் நடைபெற்றது.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 15 வது வார்டு சஞ்சீவி நகரில் பாரத பிரதமரின் ஐந்து லட்சம் ரூபாக்கான இலவச காப்பீட்டு திட்ட முகாம் மலைக்கோட்டை மண்டல் துணைத்தலைவர் பகவான் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பெருங்கோட்டப் பொறுப்பாளர் ஆதவ் செல்வகுமார் கலந்து கொண்டார். மலைக்கோட்டை மண்டல் தலைவர் அரவிந்த பிரகாஷ் முன்னிலையில் வகித்தார்.
மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் மகேந்திரன் அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக வழி நடத்தினர். மேலும் நிகழ்ச்சியில் மலைக்கோட்டை மண்டல் பொதுச் செயலாளர் சிவராஜ் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொருளாளர் சதீஷ் நன்றியுடைய உடன் முகாம் இனிதே நிறைவு பெற்றது. முகாமில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும், காப்பீட்டு திட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து பயன்பெற்றனர்.