திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை.

திருச்சி மத்திய சிறையில் இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சேர்ந்த குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இங்கு உள்ளனர். இவர்களிடம் நேற்று தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் சுமார் 13 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் செல்போன் மற்றும் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை சுமார் 9மணி அளவில் சென்னையில் இருந்து வருகை தந்த அமலாக்க துறை அதிகாரி அஜய்கவுர் தலைமையிலான 5பேர் கொண்ட அதிகாரிகள் கைதிகளிடம் பண பரிவர்த்தனை, நகைகள் மற்றும் வங்கி கணக்கு ஆகியவற்றை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற விசாரணையின் தொடர் விசாரணை என காவல்துறை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.