BREAKING NEWS

திருச்சி மாவட்டம் துவாக்குடி அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டம்  துவாக்குடி அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி தஞ்சை புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் சென்றனர்.


வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், கட்டுக்கு அடங்காத காளைகளுக்கும் வெள்ளி காசு, ரொக்கம், ட்ரெஸ்ஸிங் டேபிள், டைனிங் டேபிள், பிளாஸ்டிக் சேர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இதனிடையே தரமில்லாத பரிசுப்பொருட்கள் வழங்கியதாக காளையின் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது விழா கமிட்டியினருக்கும், காளையின் உரிமையாளருக்கும் இடையே வாடிவாசல் களத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )