BREAKING NEWS

திருச்சி மாவட்ட தொழில் மையத்தின் மேலாளர் வங்கி லாக்கரில் 110 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பறிமுதல்

திருச்சி மாவட்ட தொழில் மையத்தின் மேலாளர் வங்கி லாக்கரில் 110 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பறிமுதல்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் மாவட்ட தொழில் மையம் செயல்பட்டு வருகிறது இந்த தொழில் மையத்தில் பல்வேறு தொழில்களுக்கு கடன் பெறுவதற்கான திட்ட அறிக்கை கொடுக்கப்பட்டு அவர்கள் மூலமாக வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது.


இந்த அலுவலகத்தின் மூலம் கடன் பெற விரும்புவோர் இடம் தொடர்ந்து லஞ்சம் கேட்பதாக பல்வேறு புகார் வந்ததாக கூறப்படுகிறது. திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது மாவட்ட தொழில் மையத்தின் மேலாளர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி மேலாளர் கம்பன் ஆகியோரிடம் கணக்கில் இல்லாமல் இருந்து ரூபாய் 3 லட்சம் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.


மேலும் மேலாளர் ரவீந்திரனுக்கு சொந்தமான உறையூர் மற்றும் காட்டுரில் உள்ள வீடுகளிலும் மற்றும் உதவி மேலாளர் கம்பன் வீடுகளிலும் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


இதில் மேலாளர் ரவிச்சந்திரன் வீட்டில் சுமார் 6 லட்சம் ரூபாய் பணமும, 50 பவுன் நகையை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதேபோல் உதவி மேலாளர் வீட்டிலும் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்தனர்.


மேலும், மேலாளர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான வங்கி லாக்கரில் 110 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 2பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )