திருச்சி முன்னாள் அமைச்சர் அலுவலகத்தில் ஓபிஎஸ் படங்கள் கிழிப்பு.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது ஒற்றை தலைமை வேண்டும் என்ற பிரச்சனை தலையெடுத்தது காரணமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறாமல் அடுத்த மாதம் பதினொன்றாம் தேதி நடைபெறும் என தற்காலிக அவைத் தலைவர் அறிவித்தையடுத்து பொதுக்குழு எந்தவித தீர்மானம் நிறைவேற்றப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த பன்னீர்செல்வன் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு மற்றும் அவரை வெளியே போகச் சொல்லி எடப்பாடி ஆதரவாளர்கள் கூச்சட்டதால் பெரும் பரப்பு ஏற்பட்டது. மேலும், வைத்தியலிங்கம் மேடைக்கு வந்தபோது துரோகி என்று எடப்பாடி ஆதரவாளர்கள் கூச்சலிட வே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி அலுவலகத்தில் முன் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில் இருந்த ஓபிஎஸ் படம் கிழிக்கப்பட்டது. மேலும் அலுவலகத்தின் உள்ளே சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த ஓபிஎஸ் படமும் கிழிக்கப்பட்டு இருந்தது. திருச்சியை பொருத்தவரை மாவட்ட செயலாளர்கள் மற்றும் பெரும்பாலான அதிமுகவினர் எடப்