திருச்சி மேலகல்கண்டார் கோட்டை யில் 19 வயது வாலிபர் வெட்டி படுகொலை

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை யில் 19 வயது வாலிபர் வெட்டி படுகொலை தப்பி ஓடிய கொலையாளிகளை பொன்மலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி பொன்மலை மேலகல்கண்டார்கோட்டை சோமசுந்தர நகர் அருகே சுடுகாடு பகுதியில் வெட்டப்பட்ட நிலையில் ஒரு வாலிபர் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்த பொன்மலை போலீசார் வெட்டுப்பட்ட வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை செய்தனர். மேலும் அங்கு துணை கமிஷனர் முத்தரசு மற்றும் பொன்மலை உதவி கமிஷனர் காமராஜ் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

வெட்டப்பட்டு இறந்த வாலிபர் யார் இங்கே எப்படி வந்தார் யார் கொலை செய்தது என தொடர்ந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் அரியமங்கலம் அம்பிகாபுரம் ஹவுசிங் போர்டு காலனி பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் ரிஷி வயது (19) என்பது தெரியவந்தது அரியமங்கலம் எஸ்ஐடி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் நேற்று இரவு சில நண்பர்களோடு சேர்ந்து மேல கல்கண்டார் கோட்டை சோமசுந்தர நகர் சுடுகாட்டு பகுதியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட சண்டையில் கொலை செய்யப்பட்டாரா?


அல்லது இவர் வேறு ஒரு ஜாதி பெண்ணை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது அதனால் ஏற்பட்ட பிரச்சினையில் கொலை செய்யப்பட்டாரா? என்றும் போலீசார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். வாலிபரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
