BREAKING NEWS

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு  அதிகாலை முதலே  ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என அழைக்கப்படுகிறது. சந்திரன் தேய்பிறையிலிருந்து விடுபட்டு வளர்பிறைக்குச் செல்லும் நாள்
இந்த நாளில் முன்னோர் வழிபாட்டைச் செய்யலாம் என்பது ஐதீகம். அதிலும் குறிப்பாக வருடத்தில் மூன்று அமாவாசைகள், தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.

 

 

ஆடி அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்கள் சொர்க்கத்திலிருந்து நம்மை ஆசிர்வதிப்பதாக ஐதீகம்.

ஆடி அமாவாசை அன்று புனித நதி, ஆறு, நீர் நிலைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் நம் பாவங்கள் நீங்கி விமோசனம் அடைய முடியும் என்பதும் நம்பிக்கை.
இந்த நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமான மக்கள் குவிந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

 

 

பொது மக்கள் கூட்டம் அதிக அளவில் கானப்பட்டதால் பாதுகாப்பணியில் ஏராளமான காவல்துறையினர் வைக்கப்பட்டு இருந்தார்கள் மேலும் முன்னேற்ற கழக தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு ஆற்றங்கரைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )