திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவெம்பாவை உற்சவத்தை முன்னிட்டு நாளை முதல் 10 நாட்களுக்கு தங்க தேர் ஓடாது என கோவில் நிர்வாகம் தகவல்..
திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கத் தேரை பக்தர்கள் கட்டணம் செலுத்தி கோவில் கிரி பிரகாரம் சுற்றி இழுத்துச் சென்று வழிபடுவது வழக்கம்.
இந்த நிலையில் நாளை திருவெம்பாவை உற்சவம் துவங்குகிறது. இதனை முன்னிட்டு நாளை முதல் தங்கத்தேர் புறப்பாடு 10 நாட்கள் நடைபெறாது. என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மார்கழி மாதம் திருவெம்பாவை உற்சவம் நாளை (28-12-22) துவங்கி ஜனவரி 6ம் தேதி வரை நடக்கிறது.
அன்றைய தினம் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இதனால் 28 தேதி முதல் மாலையில் சுவாமி மாணிக்கவாசகர் புறப்பாடு நடக்கிறது. இதனால் வழக்கமாக மாலையில் நடக்கும் தங்கத் தேர் புறப்பாடு 10 நாட்கள் ரத்து செய்யப்பட்டது. என கோயில் இணை ஆணையர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்செந்தூர்திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்தூத்துக்குடிதூத்துக்குடி மாவட்டம்