BREAKING NEWS

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருநாள் நாளை நடக்கிறது. சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருநாள் நாளை நடக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருநாள் நாளை நடக்கிறது.  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருநாள் நாளை நடக்கிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை நடக்கிறது. விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.


திருவிழாவை முன்னிட்டு நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்பத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோர்ச்சனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகமும் நடக்கிறது.

திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதற்காக 100 மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

கடற்கரையில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் கடலில் பாதுகாப்பு வளையம் அமைத்து கோவில் கடல் பக்தர் பாதுகாப்பு குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள். மேலும் சர்ப்பக் காவடி எடுத்து வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )