திருச்செந்தூர் ஜீவா நகரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப் படுவதை எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர் ஆவுடையார் குளம் உபரி நீர் வடிகால் ஓடையில் ஜீவா நகரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப் படுவதை எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் ஆவுடையார்குளத்தில் உபரி நீர் வடிகால் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதனடிப்படையில் வருவாய்துறையினர் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல் கட்டமாக ஜேசிபி இயந்திரம் மூலம் சரவணப்பொய்கை தெரு, சலவையார்தெரு பகுதியில் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அகற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜீவா நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் மக்கள் இன்று திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.