திருச்செந்தூர் முருகன் கோவிலில், கடலில் புனித நீராடி சுமார் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடி கிருத்திகை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். கடலில் புனித நீராடி சுமார் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடி கிருத்திகை என்பது முருக கடவுளுக்கு உகந்த நாள் மற்றும் நட்சத்திரம் என்பதால் ஆடி கிருத்திகை அன்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முருகப்பெருமானை பக்தர்கள் வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஆடி கிருத்திகை முன்னிட்டு முருக கடவுளின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

ஐந்து முப்பது மணிக்கு விஸ்வரூப நிபாரதனையும், அதனைத் தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள். கடலில் புனித நீராடி சுமார் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு குடிதண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
