BREAKING NEWS

திருநங்கைகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசு எண்ணற்றத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது மாநகராட்சி துணை மேயர் பேச்சு.

திருநங்கைகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசு எண்ணற்றத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது  மாநகராட்சி துணை மேயர் பேச்சு.

தஞ்சாவூர்,

திருநங்கைகளின் வளர்ச்சிக்காக எண்ணற்றத் திட்டங்களை தமிழ அரசு கொண்டு வந்துள்ளது என்று தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி பேசினார்.

 

மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI), தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் இலக்கு மக்கள் ஒன்று கூடல் இணைந்து திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி தஞ்சையில் நேற்று நடைபெற்றது.

 

 

தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி தலைமை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி ஐ.ஓ.பி. இயக்குனர் அலமேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். (PDI)திட்ட இயக்குனர் முனைவர் அம்பலவாணன் திட்ட விளக்கவு உரையாற்றினார். திட்ட மேலாளர் தேன்மொழி வரவேற்றார்‌.

 

மாநகராட்சி துணை மேயர் அஞ்சும் பூபதி பேசியதாவது:
சமூகத்தில் ஒரு அந்தஸ்தை கொடுக்கும் வகையில் திருநங்கைகள் என்று பெயரை வைத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கருணாநிதி.

 

 

திருநங்கைகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, நிறைவேற்றி வருகிறது. திருநங்கைகள் அரசின் உயர்மட்ட துறையில் பல்வேறு பதவிகளில் உள்ளனர்.

 

தமிழக அரசு திருநங்கைகளுக்கு என தனியாக நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எண்ணற்ற மானியங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ள.இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பொருளாதாரத்தில் நீங்கள் மேம்பாடு அடையவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாடுபட்டு வருகிறார்.

 

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் திருநங்கைகளின் தலைவிகள் நளினி நாயக், சரண்யா நாயக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முடிவில் கணக்காளர் கங்கை நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வசந்தி, பிரியங்கா, சந்திரசேகர், சதாம் உசேன், புவனேஸ்வரி, ரேவதி மற்றும் பியர் கல்வியாளர்கள் செய்திருந்தனர்.

 

CATEGORIES
TAGS